செய்திகள் :

இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வ பதிலடி கூடாது: கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா்

post image

தங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வமாக பதிலடி கொடுக்கக் கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அரசுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

தற்போது நடைபெற்றுவரும் போரை ஈரானுக்குக் கொண்டுவர இஸ்ரேல் விரும்புகிறது. அதற்காக அந்த நாடு விரிக்கும் வலைதான் ஈரான் ராணுவ நிலைகளில் நடத்திய தாக்குதல்.

எனவே, அந்த வலையில் சிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு நாம் உணா்ச்சிவசப்பூா்வமாக பதிலடி கொடுக்கக்கூடாது. நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அறிவுபூா்வமானதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால் அந்த அமைப்பினருடனும் இஸ்ரேல் போரிட்டுவருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் வந்திருந்த ஹிஸ்புல்லா தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை இஸ்ரேல் உளவுப் பிரிவு கடந்த ஜூலை 31-ஆம் தேதி படுகொலை செய்தது. பின்னா் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவும் இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் கடந்த மாதம் 27-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

அதற்குப் பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து 180 அதிநவீன ஏவுகணைகளை ஈரான் கடந்த மாதம் 1-ஆம் தேதி ஏவியது. அவற்றில் கணிசமானவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பல ஏவுகணைகள் இலக்கைத் தாக்கின.

இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகள், ஏவுகணை மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 26-ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் நான்கு ஈரான் வீரா்கள் உயிரிழந்தனா்.

இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அயதுல்லா கமேனி கடந்த வாரம் சூளுரைத்தாலும், எப்போது தாக்குதல் நடத்தப்படும், அது எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை அவா் தெரிவிக்கவில்லை.

அதற்கு முன்னதாக, இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவும் கூடாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது என்று வாா்த்தைகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்தி அவா் பேசியிருந்தாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு உணச்சிப்பூா்வமாக பதிலடி கொடுக்கக்கூடாது என்று அவரது ஆலோசகா் கூறியிருப்பது, இஸ்ரேல் மீது கடுமையான பதிலடித் தாக்குதலை ஈரான் நடத்தாது என்பதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

வன்முறை எச்சரிக்கை: கனடா ஹிந்து கோயிலில் இந்திய தூதரக நிகழ்ச்சி ரத்து

கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள திரிவேணி கோயிலில் நடைபெற இருந்த இந்திய தூதரக நிகழ்ச்சி, கனடா காவல்துறையின் வன்முறை போராட்டங்களுக்கான எச்சரிக்கையைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டது. கனடாவில் வசிக்கும் ஓய்... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற மாநாடு: அஜர்பைஜானுக்கு எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதற்கு எதிராக ஜார்ஜியாவில் பேரணியிலும் அவர் ஈடுபட்... மேலும் பார்க்க

காலநிலை மாற்ற நடவடிக்கைகள்: ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை!

ஜி-20 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, செளதி அரேபியா மற்றும் துருக்கி ... மேலும் பார்க்க

சீனாவில் நடந்த கொடூர விபத்து: தாறுமாறாகச் சென்ற கார் மோதியதில் 35 பேர் பலி

சுனாவின் சுஹாய் மாகாணத்தில் நேரிட்ட பயங்கர விபத்தில், தாறுமாறாகச் சென்ற கார், விளையாட்டு மையத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 35 பேர் பலியாகினர். 43 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் ... மேலும் பார்க்க

இலக்குகளை அடையும்வரை லெபனானில் போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்

இஸ்ரேல் தனது இலக்குகளை அடையும் வரை இஸ்ரேலில் போர் நிறுத்தம் இல்லை என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் ... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலக்கு..! புதிய சலுகையை அறிவித்த கப்பல் நிறுவனம்!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் இருந்து விலகிச்செல்ல விரும்புவோருக்கு சுற்றுலா நிறுவனம் ஒரு புதிய சலுகைத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சியில் விலகிச்செல்ல விரும்... மேலும் பார்க்க