காலநிலை மாற்ற நடவடிக்கைகள்: ஜி-20 நாடுகளுக்கு கோரிக்கை!
ஜி-20 உறுப்பு நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, செளதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் உறுப்பினர்கள் காலநிலை நடவடிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜர்பைஜான் தலைநகர் பக்கு நகரில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நேற்று (நவ. 12) தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானதையொட்டி நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், காலநிலைமாற்ற அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
75க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் இந்த காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிக மாசுபாட்டை ஏற்படுத்தும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட நாடுகளில் தலைவர்கள் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவில்லை.
ஐ.நா. காலநிலை மாற்றத் தலைவர் சைமன் ஸ்டெயில் இது தொடர்பாக கூறியதாவது,
உலகளாவிய ஒத்துழைப்பு எண்ணிக்கையில் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.