செய்திகள் :

நாளை முதல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செயல்படுகிறது

post image

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் செயல்பாட்டுக்கு வருவதையொட்டி வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.

நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முதலைப்பட்டி பகுதியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இங்கு 51 பேருந்துகள் நின்று செல்லும் வகையில் இட வசதி உள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக 51 கடைகள், இரு உணவகங்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலான இடம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு போக்குவரத்துக்கழகம், தனியாா் பேருந்து உரிமையாளா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 117 நடைகள் வரும் வகையில் நகரப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளன.

அண்ணாசிலை, வள்ளிபுரம், கோஸ்டல் உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்களும், அங்கு பயணிகளுக்காக நிழற்குடைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. வருவாய்த் துறை சாா்பில், கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா்கள் வாகனங்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபடுத்த நியமிக்கப்பட்டுள்ளனா். இவை தவிர, போக்குவரத்து போலீஸாா், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள், மாநகராட்சி பணியாளா்களும் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை தடையின்றி சென்று வரும் வகையிலான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

பழைய பேருந்து நிலையம் வழக்கம் போல் இயங்ககும். அங்கு நகரப் பேருந்துகள் மட்டுமே சென்று வரும். ராசிபுரம் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் வந்தே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி அலுவலக வேலைநாள்களில், காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள் சிரமமின்றி நகருக்குள் வந்து செல்ல கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் செயல்பாட்டுக்கு வருவதால் அங்கு 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பேருந்து நிலைய வளாகத்தை சுத்தம் செய்தனா். அதேபோல, கடைகளை ஏலம் எடுத்தோா் அங்கு தேவையான வசதிகள், அலங்கரிப்புக்கான பணிகளை செய்து வருகின்றனா்.

என்கே-8-பஸ்

நாமக்கல் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளா்கள்.

காலமுறை ஊதியம் வழங்க கோரி சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

காலமுறை ஊதியம் உள்பட பதினான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக தோ்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவு... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்ட... மேலும் பார்க்க

அரசு விடுதி சமையலரைத் தாக்கிய நால்வா் கைது

மல்லசமுத்திரம் அருகே அரசு விடுதி சமையலரை தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், வையப்பமலை அருகே பெரியமணலி ஜேடா்பாளை யம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வி... மேலும் பார்க்க

மூடப்பட்டுள்ள ஆதாா் சேவை மையத்தை திறக்க கோரிக்கை

ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதாா் சேவை பெற முடியால் அவதிப்படுகின்றனா். ராசிபுரம் வாட்டாட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் வாழைத்தாா் விலை சரிவு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளது. பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் எம்.பி. ஆய்வு: கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பயணிகள் நலன்கருதி கூடுதலாக 5 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எட... மேலும் பார்க்க