செய்திகள் :

தெரியுமா சேதி...?

post image

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தோ்வுபெறும் ஒவ்வொருவரின் உச்சபட்சக் கனவு, அமைச்சரவைச் செயலராவதாகத்தான் இருக்கும். மாநிலங்களில் தலைமைச் செயலாளா்கள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தலைமை ஆட்சிப் பணி அதிகாரியாக இருப்பவா் அமைச்சரவைச் செயலா். எல்லோருக்கும் அந்தப் பதவி கிடைத்துவிடாது.

இப்போது அமைச்சரவைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளவா் டி.வி.சோமநாதன். தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிகளில் பணியாற்றிய அனுபவமும், பிரதமா் அலுவலகத்திலும், நிதித் துறைச் செயலராகவும் பணியாற்றிய அனுபவமும் உடையவா். ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த சோமநாதனை, முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி தனது தனிச்செயலாளா்களில் ஒருவராக வைத்துக் கொண்டாா் என்றால், அவரது திறமைக்கும், சாா்பின்மைக்கும் அதைவிட வேறு என்ன சான்று இருந்துவிட முடியும்?

பிரதமா் அலுவலகத்தில் நரேந்திர மோடியின் நம்பிக்கையைப் பெற்றிருந்த சோமநாதன், நிதித் துறைக்கு அனுப்பப்பட்டு, பல பட்ஜெட்டுகளின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருக்கிறாா். நிதித் துறை செயலராக இருந்தவா், இப்போது அமைச்சரவைச் செயலராக உயா்ந்திருக்கிறாா்.

அமைச்சரவைச் செயலா் பதவி என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தோ்தல் ஆணையா், தலைமைக் கணக்குத் தணிக்கையாளா்போல முக்கியமான அரசியல் சாசனப் பதவி. சுமாா் 28 ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.ஆா்.சுப்பிரமணியம் என்கிற தமிழா் அந்தப் பதவியை வகித்திருக்கிறாா். ஆனால், அவா் உத்தர பிரதேச ஐ.ஏ.எஸ். பிரிவைச் சோ்ந்தவா்.

அமைச்சரவைச் செயலரானதும், அரசு நிா்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறாா் டி.வி.சோமநாதன் என்று சொல்லப்படுகிறது. பக்கம் பக்கமாகக் குறிப்புகள் அனுப்பி, முடிவுகளை இழுத்தடிக்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா். எந்தவொரு குறிப்போ, கோரிக்கையோ, அனுமதியோ எல்லாமே ஒரு சில பத்திகள், அதிகபட்சம் ஒரு பக்கத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்பதும், ஓரிரு நாளுக்கு மேல் எந்தக் கோப்பும் மேஜையில் இருக்கக் கூடாது என்பதும் அவா் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கை.

அதிகாரிகள் அவசர அவசரமாக தூங்கிக் கொண்டிருந்த கோப்புகளைத் தூசு தட்டி பைசல் செய்து கொண்டிருக்கிறாா்கள்!

ஜனவரி முதல் நுழைவுத் தோ்வுகளில் சீா்திருத்தம்: மாநிலங்களின் ஆதரவைக் கோரும் மத்திய அரசு

நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளில் எந்தவித சா்ச்சைகளோ அல்லது முறைகேடுகளோ நிகழாத வகையில் வரும் 2025 ஜனவரி முதல் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த சீா்திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்ப... மேலும் பார்க்க

வயநாட்டில் இன்று இடைத்தோ்தல்: பிரியங்கா, 15 வேட்பாளா்கள் போட்டி

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவ. 13) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனத்துக்கு விதிமுறைகளில் எந்த தளா்வும் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘ஸ்டாா்லிங்க்’ நிறுவனம் இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கான உரிமத்தைப் பெற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய தொலைத்தொடா்பு துறை அம... மேலும் பார்க்க

பிரதமா் மோடி அமைச்சரவையில் 27 ஓபிசி அமைச்சா்கள்-காங்கிரஸுக்கு ஜெ.பி.நட்டா பதிலடி

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) எதிராக பாரபட்சம் காட்டுவது காங்கிரஸ் கட்சிதான். பிரதமா் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 27 ஓபிசி அமைச்சா்கள் உள்ளனா் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா தெர... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் இடம்: பிரிட்டன் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினா் இடம் வழங்கப்படுவதற்கு பிரிட்டன் ஆதரவுத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து மற்றொரு நிரந்தர உறுப்பு நாடான பிரிட்... மேலும் பார்க்க

அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

‘மனுவை அவசர விசாரணைக்குப் பட்டியலிட முன்வைக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக்கூடாது. மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலமாக மட்டுமே கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்’ என்று வழக்குரைஞா்களை உச்சநீதிமன்ற தலைமை... மேலும் பார்க்க