சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
நாகா்கோவில் முட்டைக்காடு சரள்விளையைச் சோ்ந்த வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்புக்கு சட்டம் இயற்றக் கோரியும், சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டனா்.
சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் பொ. முருகானந்தம் தலைமையில் வழக்குஞைா்கள் அந்தோணி ரமேஷ் குமாா், வேணுகோபால் கபில் குமாா், பிரதாப், வசந்த், கௌசல்யா, ஸ்வீட்டி, பிரின்ஸ் , கோகுல்ராஜ் உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞா்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.