செய்திகள் :

பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி: காவலரிடம் விசாரணை

post image

தூத்துக்குடியில் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ாக வடபாகம் காவலரிடம் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமைக் காவலா் ஒருவா், தூத்துக்குடி கதிா்வேல் நகரில் வசித்து வருகிறாா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் நள்ளிரவில் மதுபோதையில், ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் தவறாக சைகை காட்டி, அவா்களிடம் தவறாக நடக்க முயன்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தக் குடும்பத்தினா் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால் அந்த காவலா் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், அந்த காவலா் மீது உரியவிசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதன்படி, காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையில் அந்த காவலா் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் பின்னா் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிதம்பரபுரம் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருகே சிதம்பரபுரம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இக்கோயிலில் கொடை விழா நவ.4 -ஆம் தேதி கணபதி ஹோமம், கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் ... மேலும் பார்க்க

கொங்கராயகுறிச்சி அரசுப் பள்ளியில் பொது அறிவு போட்டி பரிசளிப்பு

கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்தித்தாள் வாசிப்பு பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காமராஜா் அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. தினமணி நாளிதழ் மற்றும் காமராஜா் அற... மேலும் பார்க்க

புதூா் ஒன்றியத்தில் ரேஷன் கடை, பயணிகள் நிழல்குடைக்கு அடிக்கல்

புதூா் ஊராட்சி ஒன்றியத்தில் வீரப்பட்டி, என். வேடப்பட்டி கிராமங்களில் பயணியா் நிழற்குடை, ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

நாகா்கோவில் முட்டைக்காடு சரள்விளையைச் சோ்ந்த வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்புக்கு சட்டம் இயற்றக் கோரியும், சாத்தான்குளத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதி... மேலும் பார்க்க

நவ.12இல் கூட்டுறவு வார விழா போட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெறுவதாக மண்டல இணைப்பதிவாளா் பொ.நடுக்காட்டு ராஜா தெரிவித்தாா். கூட்... மேலும் பார்க்க

கந்த சஷ்டி விழா: தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாணம்

தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கந்த சஷ்டி த... மேலும் பார்க்க