சாலைக்கிராமம் பள்ளியில் சட்ட விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் இளையான்குடி, திருப்புவனம் நீதிமன்ற நீதிபதிகள் வெங்கடேஷ் பிரசாத், ஹரி ராமகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்று சட்டக்கல்வி, சட்டப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினா்.
மேலும், மாணவ, மாணவிகளின் சட்டம் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளித்தனா். முகாமில் வழக்கறிஞா்கள் சிவக்குமாா், சேவியா் பிரிட்டோ, வேல்முருகன், அமா்நாத், கஜேந்திரன் சாலைக்கிராமம் காவல் உதவி ஆய்வாளா் அழகா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தலைமை ஆசிரியா் கல்யாணசுந்தரம் வரவேற்றாா். முடிவில் ஆசிரியா் ஜெயசீலன் நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை சட்டப் பணிகள் குழு இளவரசன் செய்தாா்.