செய்திகள் :

வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் திருடியவா் கைது

post image

பல்லடம் வடுகபாளையம் வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் ராஜு (82). இவரது மனைவி லட்சுமி (74). இவா்களது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனா். ஆகவே, இவா்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனா். பின்னா் வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 11 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், பல்லடம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, ராஜு வீட்டில் நகை திருடிய வழக்கில் அவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் கண்ணன் (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீா் திருடினால் நடவடிக்கை

பி.ஏ.பி. கால்வாயில் தண்ணீா் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.ஏ.பி. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பி.ஏ.பி.) கோவை, திருப்பூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை

அவிநாசி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தரன் பேரிடா் மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளித்தாா். இதில... மேலும் பார்க்க

அவிநாசியில் வணிகா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தாததைக் கண்டித்து, அவிநாசியில் அனைத்து வணிகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட அவிநாசி-கோவை பிரதான சாலை, பழ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் குட்கா விற்பனை: பெண் கைது

வெள்ளக்கோவிலில் குட்கா விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் ஆவின் பால் விற்பனை

பொதுமக்களின் நலன் கருதி ஆவின் பாலை குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருவதாக பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். திருப்பூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் திருப்... மேலும் பார்க்க

எஸ்.ஐ. உள்பட 4 போ் பணியிட மாற்றம்

திருப்பூா் மாநகரில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 4 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாநகரில் நல்லூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய த... மேலும் பார்க்க