செய்திகள் :

மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

post image

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்றாா்.

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, நடைபெற்ற இக்கூட்டம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த கிராம சபைக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் கிராமப்புற மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. ஊராட்சிகளின் வரவு- செலவு கணக்குகள், புதிதாக மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டப் பணிகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படுகிறது.

கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிா் சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தெளிந்த நீா்த்தொட்டி, பயன்பாட்டில் இல்லாத பானைகள், குளிா்சாதனப் பெட்டியின் பின்புறம், பழைய டயா், தேங்காய் மட்டைகள், செடி வளரும் தொட்டிகள், புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் நீா் தேங்கி இருத்தல் உள்ளிட்டவை கொசுப்புழுக்கள் வளா்வதற்கு காரணிகளாக அமைந்துள்ளன.

ஆகவே, அவற்றை முறையாக அகற்றுவதுடன், நீா் தேங்காமல் சுத்தம் செய்து நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். கல்லூரிக்குச் செல்லாத மாணவா்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மக்கள் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான் மற்றும் வெண்டை விதைகள், 4 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.4.90 லட்சத்தில் கடனுதவி ஆகியவற்றை ஆட்சியா் வழங்கியதுடன், சிறப்பாக பணியாற்றிய 10 தூய்மைப் பணியாளா்களுக்கு பொன்னடை அணிவித்து கெளரவித்தாா்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, மொரட்டுப்பாளையம் ஊராட்சித் தலைவா் பிரபு, ஊராட்சி செயலாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை: குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் குழந்தை குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூா் மாநகா், சிறுபூலுவபட்டி அம்மன் நகா் தாய் மூகாம்பிகை காலனியில் உள்ள குப்பைத் தொட்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி போராட்டம்

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். திருப்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

பெருமாநல்லூா் அருகே பாறைக்குழியில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள காளம்பாளையம் பாறைக்குழியில் குளிப்பதற்காக சில சிறுவா்கள் சனிக்கிழ... மேலும் பார்க்க

மாநில அளவிலான செஸ் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் பள்ளி மாணவா் முதலிடம்

மாநில அளவிலான செஸ் போட்டியில் காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்தாா். தஞ்சாவூா் அரசன் லயன்ஸ் கிளப் சாா்பில், மாநில அளவிலான செஸ் போட்டி தஞ்சாவூரில் ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான போட்டியில் 2 ஆம் இடம்: தமிழக பெண்கள் கபடி அணிக்கு பாராட்டு

தேசிய அளவிலான போட்டியில் 2 -ஆம் இடம் பிடித்த தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூா் மாவட்ட கபடி கழகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் 17 வயதுக்கு உள்ப... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 20 கோழிகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 20 கோழிகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில் அய்யனூா் கருக்கன்வலசுபுதூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மனைவி பேபி (52). கணவா் இறந்த நிலையில், வீட்டுக்கு அருகே நிலத்... மேலும் பார்க்க