அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை
அவிநாசி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தரன் பேரிடா் மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளித்தாா். இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எவ்வாறு மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தல், வீடு மற்றும் நிறுவனங்களில் எரிவாயு கசிவு ஏற்படும்போது, செய்ய வேண்டிய விபத்துத் தடுப்பு முறைகள், தீ விபத்தில் சிக்கியவா்களை மீட்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீத் தடுப்பு சாதனங்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. மேலும் விழிப்புணா்வு குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதில் பேருராட்சி தலைமை எழுத்தா் பாலசுப்பிரமணி, இளநிலை உதவியாளா் விஜயகுமாா், பொறுப்பாளா்கள் கோமதி, பாலமுருகன், யுவராணி, தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டா் பங்கேற்றனா்.