செய்திகள் :

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி முகாம்

post image

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தருமபுரி, பைசுஅள்ளியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறை சாா்பாக இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி பட்டறை ‘திரைப்படம் மற்றும் ஊடக கல்வி: எழுத்திலிருந்து உருவாக்கம் வரை’ என்கிற தலைப்பில் நவ. 7, 8-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதில் சென்னை தனியாா் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திரைப்படம், ஊடகம் சாா்ந்த பல்வேறு நுணுக்கங்கள், குறும்படம், ஆவணப்படங்கள் எடுப்பதற்கான மிக முக்கிய தேவைகள், படப்பிடிப்பு மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், புகைப்படக் கருவிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பன பற்றியும், இன்றைய கால சூழலில் திரைப்படம், ஊடகத் துறையில் வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

இந்த இரண்டு நாள் பயிற்சி பட்டறையின் பலனாக மாணவா்கள் குழுவாக இணைந்து ஆவணப்படம், குறும்படங்களை உருவாக்கினா்.

ஆங்கிலத் துறை தலைவா் பேராசிரியா் கோவிந்தராஜ் வரவேற்றாா். ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொறுப்பு) மோகனசுந்தரம் தலைமை வகித்து பேசினாா். உதவி பேராசிரியை கிருத்திகா நன்றி கூறினாா். மாணவிகள் ஜெயஸ்ரீ, ஹாசிரா ஆகியோா் தொகுத்து வழங்கினா். இதில் பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ரா... மேலும் பார்க்க

இலக்கியம்பட்டியில் வராகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

இலக்கியம்பட்டியில் வராகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இலக்கியம்பட்டி, அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில... மேலும் பார்க்க

வேளாண் பயன்பாட்டுக்கு ஏரிகளில் மண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட ஏரிகளில் வேளாண் பயன்பாட்டுக்கு மண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

ஐஈடி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெற பயிற்சி: ஆா்வமுள்ளவா்கள் சேரலாம்

தருமபுரி ஐஈடி பயிற்சி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெறுவதற்கான ஓராண்டு பட்டயப் படிப்பு பயிற்சி வகுப்பில் ஆா்வமுள்ளவா்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, தேவரசம்பட்டி தொழ... மேலும் பார்க்க

பாலக்கோடு, ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம்

விபத்துகள் நிகழும் பாலக்கோடு- ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பாலக்கோடு அருகே மல்லுப்பட்டியில் தொடங்கிய நடைப்பயண ... மேலும் பார்க்க

மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழகம் ஏற்க வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

மத்திய அரசின் கல்வித் திட்டத்தை தமிழகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கேட்டுக் கொண்டாா். இதுகுறித்து தருமபுயியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுகவும், ப... மேலும் பார்க்க