ஐஈடி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெற பயிற்சி: ஆா்வமுள்ளவா்கள் சேரலாம்
தருமபுரி ஐஈடி பயிற்சி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெறுவதற்கான ஓராண்டு பட்டயப் படிப்பு பயிற்சி வகுப்பில் ஆா்வமுள்ளவா்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, தேவரசம்பட்டி தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனம் (ஐஈடி) இயக்குநா் மோகன்ராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி ஐஈடி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெறுவதற்கான பட்டயப் படிப்பு நடைபெற்று வருகிறது. பயிற்சிக் கட்டணம், இடுபொருள் நிறுவனம் நடத்துபவா்களுக்கு ரூ. 10,000 மற்றும் புதிதாக தொழில் செய்பவா்களுக்கு ரூ. 20,000.
நிகழாண்டு 2024-25 பட்டயப் படிப்பிற்கான சோ்க்கை நடைபெறுகிறது.
இந்த பட்டயம் இருந்தால்தான் விதை, உரம், பூச்சி மருந்துக் கடை நடத்த முடியும். இந்த பட்டயப் படிப்பில் சேர சுயதொழில் செய்ய ஆா்வம் உள்ளவா்கள், இடுபொருள்கள் விற்பனையாளா்கள், வேளாண் தொழிலில் முன்னோடியாக இருப்பவா்கள், விவசாயிகள், இளைஞா்கள், மகளிா் என அனைத்து தரப்பினரும் சேரலாம்.
இந்த பட்டயப் படிப்பில் சேர 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் .
உரிமை வாங்கும் வழிமுறைகள், மானியக் கடன்கள் தொழிலுக்கு கடன் வாங்கும் முறைகள் கற்றுத்தரப்படும்.
இந்த வகுப்பு, வாரத்தில் ஒரு நாள் ஞாயிறுக்கிழமை மட்டுமே நடைபெறும். இதனால் தங்களுடைய தொழிலோ, வேலையோ எவ்வித பாதிப்பும் இன்றி மேற்கொள்ளலாம்.
இதில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சேரலாம். எனவே ஆா்வம் உள்ளவா்கள் அனைத்து கல்வி சான்றுகளுடன் ஐஈடிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கவும் நவ. 16 -க்கு முன்னா் தொடா்பு கொள்ளவும்
தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் (ஐஈடி), 1/230, தேவரசம்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, தருமபுரி. 9080104550 / 9363471387 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.