செய்திகள் :

வேளாண் பயன்பாட்டுக்கு ஏரிகளில் மண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

post image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனுமதிக்கப்பட்ட ஏரிகளில் வேளாண் பயன்பாட்டுக்கு மண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளிலிருந்து விவசாயப் பயன்பாடு, மட்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள தகுதி வாய்ந்த நீா்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 42 ஏரிகள் ஊரக வளா்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 111 ஏரிகள் என மொத்தம் 153 நீா்நிலைகள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்யப்பட்டு இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 1431 விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு அதில் 945 விண்ணப்பங்களுக்கு வட்டாட்சியா்களால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மொத்தம் 120753 கன மீட்டா் வண்டல், களிமண் எடுத்து விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இத் திட்டத்தின் கீழ் மேலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மட்பாண்டத் தொழிலாளா்கள் விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மட்பாண்டத் தொழிலை சிறப்புற செய்யவும் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ - சேவை மையங்களை அணுகி ட்ற்ற்ல்ள்//ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

புதிய வகுப்பறை கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் திறப்பு

தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். தருமபுரி மாவட்டம், அதகப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு த... மேலும் பார்க்க

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் ரா... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி முகாம்

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. தருமபுரி, பைசுஅள்ளியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் த... மேலும் பார்க்க

இலக்கியம்பட்டியில் வராகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா

இலக்கியம்பட்டியில் வராகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இலக்கியம்பட்டி, அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில... மேலும் பார்க்க

ஐஈடி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெற பயிற்சி: ஆா்வமுள்ளவா்கள் சேரலாம்

தருமபுரி ஐஈடி பயிற்சி நிறுவனத்தில் வேளாண் இடுபொருள்கள் விற்பனை உரிமம் பெறுவதற்கான ஓராண்டு பட்டயப் படிப்பு பயிற்சி வகுப்பில் ஆா்வமுள்ளவா்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, தேவரசம்பட்டி தொழ... மேலும் பார்க்க

பாலக்கோடு, ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம்

விபத்துகள் நிகழும் பாலக்கோடு- ஒசூா் நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பாலக்கோடு அருகே மல்லுப்பட்டியில் தொடங்கிய நடைப்பயண ... மேலும் பார்க்க