செய்திகள் :

ஆஸி. பிஎம் லெவன் அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் கேப்டன்!

post image

இந்தியாவுக்கு எதிராக இரண்டு நாள்கள் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

39 வயதான டிம் பெய்ன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கினார். அந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

டிம் பெய்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 35 டெஸ்ட், 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிரிஸ்பேனின் காபா திடலில் நடந்த போட்டியில் விளையாடியிருந்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

அவர் கடைசியாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாஸ்மேனியா அணிக்காக முதல் தரப் போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் தற்போது பிக்-பாஸ் கிரிக்கெட்டில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில், “என்னைப் போன்ற இளம் பயிற்சியாளருக்கு நீங்கள் கொடுத்த சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். அதையே நானும் எதிர்பார்த்துள்ளேன். ஆஸ்திரேலியாவில் உள்ள மிகச்சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதில் இளஞ்சிவப்பு நிறப் பந்தில் நடைபெறும் இரண்டு நாள் ஆட்டம் டிசம்பர் 6-10-ல் அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்துக்கு முன்னதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் மாதம் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

முதல் டி20: இந்தியா பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படுவாரா? முன்னாள் கேப்டன் ஆர்வம்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க எந்த அணி முனைப்பு காட்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர்... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வலுவாக முதலிடத்தில் நீடித்து வந்த இந்திய அணி, ... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான தொடரில் இவர்கள் இருவரும் மிக முக்கியம்: இந்திய முன்னாள் வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு வீரர்களை முக்கியமானவர்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குறிப்பிட்டுள்ளார்.இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட... மேலும் பார்க்க

ஆண் குழந்தைக்குத் தந்தையானார் டிராவிஸ் ஹெட்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா டேவிட்டுக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.ஆஸி. தடுமாற்றம்... மேலும் பார்க்க

ஆஸி. தடுமாற்றம்: பாகிஸ்தான் வரலாற்று வெற்றி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி ஆஸி.க்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக... மேலும் பார்க்க