செய்திகள் :

பாம்பு கடி அறிவிக்கை செய்யக்கூடிய நோய்: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

post image

பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பதிவாகியுள்ளது. அவர்களில் 3 பேர் பலியாகியுள்ளனர். கடந்தாண்டில் 19,795 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கு போதிய மருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இருப்பினும், தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாம்பு கடிக்கான போதிய மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை "அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நவ. 6 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பில், ``தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை "அறிவிக்யக செய்யக் கூடிய நோயாக" தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை.

பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்குத் தரவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:மும்பையில் சின்னத்திரை நடிகர் தூக்கிட்டுத் தற்கொலை!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரத சாகு கால்நடைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார். இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கோவை மேற்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். மேலும் பார்க்க

3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் - இலங்கை கடற்கரையை... மேலும் பார்க்க

பட்டாசு, மளிகைப் பொருள் தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை! - அமைச்சர்

கூட்டுறவுத் துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துற... மேலும் பார்க்க

அதிமுகவில் கள ஆய்வுக் குழு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுகவில் முன்னாள் அமைச்சா்கள் 10 போ் கொண்ட கள ஆய்வுக் குழுவை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் கிளை, வாா்டு... மேலும் பார்க்க