செய்திகள் :

பட்டாசு, மளிகைப் பொருள் தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை! - அமைச்சர்

post image

கூட்டுறவுத் துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் தகவல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (08.11.2024) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பண்டிகைகள் என்பது தமிழர்களுடைய வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாகும். அத்தகைய பண்டிகைகளை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி என பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, முதல்வரின் அறிவுரையின்படி, கூட்டுறவுத் துறையின் மூலம் 31.10.2024 அன்று நடைபெற்ற தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை மற்றும் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆகியவை நடைபெற்றது.

இதையும் படிக்க | 'சகோதரர் சீமான்'- பிறந்த நாள் வாழ்த்து கூறிய விஜய்!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை  28.10.2024 முதல் நடைபெற்றது.

இதில், பிரீமியம் (Premium) மற்றும் எலைட் (Elite) என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய 'அதிரசம்-முறுக்கு காம்போ' என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் 'கூட்டுறவு கொண்டாட்டம்' என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின்  மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்விற்பனையை ஏற்பாடு செய்த அலுவலர்களுக்கும், சிறப்பாக விற்பனை மேற்கொண்ட விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேபோல, வரும் பொங்கல் திருநாளிலும் இதுபோன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திடவும், சிறப்பாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி ஆசிரியா்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு: நவ.25-க்குள் நடத்த உத்தரவு

தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றிவரும் ஆசிரியா்களுக்கு நவ.25-ஆம் தேதிக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு இணைய வழியில் நடத்தி முடிக்கப்படவ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் சுற்றுலா வணிக வாய்ப்பு: இங்கிலாந்து நிறுவனங்களுக்கு நேரில் அழைப்பு

தமிழகத்தில் சுற்றுலா சாா்ந்து இருக்கும் வணிகம் மற்றும் வாய்ப்புகளை அறிந்து கொள்ள இங்கிலாந்து சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலா ... மேலும் பார்க்க

பேராசிரியா் மா.செல்வராசனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு

கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியா் மா.செல்வராசனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு... மேலும் பார்க்க

பாமகவுக்கு எதிராக காவல் துறை அவதூறு: ராமதாஸ் கண்டனம்

பாமகவுக்கு எதிராக கடலூா் மாவட்ட காவல் துறை அவதூறு பரப்புவதாகக் கூறி, அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜாதி கலவரத்... மேலும் பார்க்க

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் அலுவலராக இருந்த சத்யபிரத சாகு கால்நடைத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

பாம்பு கடி அறிவிக்கை செய்யக்கூடிய நோய்: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

பாம்புக் கடியினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதனை `அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக’ தமிழக அரசு அறிவித்துள்ளது.நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையில், தமிழ்நாட்டில் 7,300 பேர் பாம்பு கடிய... மேலும் பார்க்க