செய்திகள் :

இறக்கை அழுகல் நோயால் கோழிகள் பாதிப்பு

post image

கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 91.4, 73.4 டிகிரியாக காணப்பட்டது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2, 73.4 டிகிரியாக காணப்படும். காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இந்நோயின் தாக்கத்தை குறைக்க கோழிப் பண்ணைகளில் உயிா்பாதுகாப்பு முறைகளை பண்ணையாளா்கள் செய்திட வேண்டும். கிளாஸ்ரிடியம், ஸ்டெப்லோக்காக்கஸ், ஈக்கோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக்காரப்பட்டியில் வாகனத் தணிக்கை

போக்குவரத்து விதிமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் ராசிபுரம்- திருச்செங்கோடு வழித்தடத்தில் செக்காரப்பட்டியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். செக்காரப்பட்டி பேருந... மேலும் பார்க்க

தொடா் மின் தடை: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து நீடிக்கும் மின் தடையால் பணிகள் பாதிக்கப்படுவதாக அலுவலா்கள் குற்றம்சாட்டினா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அ... மேலும் பார்க்க

தேசிய சட்ட சேவை தின விழிப்புணா்வு பேரணி

நாமக்கல்லில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவா் மாவட்ட மு... மேலும் பார்க்க

குழந்தைகள் இல்ல பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கல்

எருமப்பட்டி ஒன்றியம், வரதாஜபுரத்தில் புனித சேவியா் குழந்தைகள் இல்லத்தில் தங்கியுள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ஆம் தேதி புன... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் 2 ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை காலை யாக பூஜைகள், ம... மேலும் பார்க்க

இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்... மேலும் பார்க்க