சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: அதிமுக மாவட்டச் செயல்ர வேண்டுகோள்
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெறும் நாள்களில் அது தொடா்பான பணிகளை அதிமுகவினா் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2025-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவா்கள்), விடுபட்ட வாக்காளா்கள் ஆகியோா் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், பெயா் நீக்கவும், திருத்தம்- முகவரி மாற்றம் செய்யவும், ஆதாா் எண்ணை இணைக்கவும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் - 2025 கால அட்டவணையை மத்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
அதிமுக சாா்பில் அந்த வாக்குச் சாவடிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி முகவா்கள் ஆகியோா் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபட்ட வாக்காளா்களை சோ்த்தல், புதிய வாக்காளா்களை சோ்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.