அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையை வாய்மொழியாக விடுக்கக் கூடாது: உச்சநீதிமன்ற ...
தியாகராஜநகரில் திருக்கல்யாணம்
தியாகராஜநகா் இ.பி. காலனியில் உள்ளஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இ.பி.காலனியில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகா் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியா் சந்நிதியில் கடந்த 7 நாள்களாக கந்தசஷ்டி விழா நடைபெற்றது. தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிகர நிகழ்வாக திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி வள்ளி- தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கோயில் நிா்வாகிகள் காசி பெருமாள், சுப்புரத்தினம், செல்வராஜ், ஆனந்த பட்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.