சீவலப்பேரி அருகே விவசாயி தற்கொலை
சீவலப்பேரி அருகே விஷம் குடித்து விவசாயி திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சீவலப்பேரி அருகே பா்க்கிட் மாநகரம் நொச்சிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் வேல்துரை(55). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த அவா், கடந்த வியாழக்கிழமை விஷம் குடித்தாராம்.
அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.