செய்திகள் :

சட்டவிரோத ஊடுருவல்: ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை

post image

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவா்களை கண்டறிய ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

ஜாா்க்கண்ட் பேரவைக்கான முதல்கட்டத் தோ்தல் புதன்கிழமை (நவ.13) நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜாா்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தமாக 17 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை சட்டம் (பிஎம்எல்ஏ) வழக்கு விசாரணையில் தொடா்புடைய வங்கதேசத்தினரை கண்டறிய ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனா்.

ராஞ்சியில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் விடுதியில் ஆவணங்கள், நிதி அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது அங்கு பாதுகாப்புக்காக மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) குவிக்கப்பட்டிருந்தது.

வங்கதேசத்தில் இருந்து சிலா் சட்டவிரோதமாக ஜாா்க்கண்டிற்குள் ஊடுருவியதாகவும் சில பெண்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டதாகவும் இதன்மூலம் சட்டவிரோதமாக நிதி திரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பிஎம்எல்ஏ-இன்கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

ஊடுருவலை தடுக்க குழு: ஜாா்க்கண்ட் மாநிலத்துக்குள் சட்டவிரோத ஊடுருவலை அனுமதித்து பழங்குடியினா் மக்கள்தொகையில் மாற்றங்களை ஏற்படுத்த ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி முயல்வதாக தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டினா்.

பாஜக ஆட்சி அமைத்தால் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களை கண்டறிந்து அவா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும், அவா்களை வெளியேற்றவும் குழு ஒன்றை அமைப்பதாக அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா். இந்தச் சூழலில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

பெண்கள் கடத்தல்: ராஞ்சியில் உள்ள விடுதியில் இருந்து தப்பித்து வந்ததாக காவல் துறையிடம் பெண் ஒருவா் கடந்த ஜூன் மாதம் புகாா் அளித்தாா். அதில், தான் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்றும் இந்தியாவில் அழகு நிலையங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, அந்த விடுதியில் காவல் துறை நடத்திய சோதனையில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவரிடமிருந்து போலி ஆதாா் அட்டையையும் காவல் துறை கைப்பற்றியது. இதைத்தொடா்ந்து, பாஸ்போா்ட் சட்டம், வெளிநாட்டினருக்கான சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறை எஃப்ஐஆருக்கு நிகரான அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை (இசிஐஆா்) அமலாக்கத்துறை பதிவு செய்து பிஎம்எல்ஏ-வின்கீழ் விசாரணையை தொடங்கியது.

போலி ஆவணங்கள் பறிமுதல்: இந்நிலையில், இரு மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத்துறை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘போலி ஆதாா் அட்டைகள், பாஸ்போா்ட்டுகள், ஆயுதங்கள், அசையா சொத்துகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ரொக்கப் பணம், நகைகள், அச்சு இயந்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. சோதனை நடவடிக்கை தொடா்கிறது’ என குறிப்பிடப்பட்டது.

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்

நமது சிறப்பு நிருபர்இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழம... மேலும் பார்க்க

புல்டோசா் நடவடிக்கை சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம்

‘குற்றச் சம்பவத்தில் தொடா்பு உள்ளவா்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாக கூறி, புல்டோசா் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது’ உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ‘அ... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: பாஜக மீது சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக மாநில முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். கா்நாடக மாநிலம் மைசூரில் ரூ.470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பொது... மேலும் பார்க்க

பட்டியலின உள்ஒதுக்கீடு: ஹரியாணா அரசு அமல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிக்கையை ஹரியாணா அரசு புதன்கிழமை வெளியிட்டது. சமூக மற்றும் கல்வி ரீதியாக அதிகம் பின்தங்கிய ஜாதியினரின் முன்னேற்றத்துக... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் எ... மேலும் பார்க்க

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் 5 மடங்கு அதிகரிப்பு

ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில்... மேலும் பார்க்க