மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து நவ.2-ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. அருவியைப் பாா்வையிடுவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து திங்கள்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.