செய்திகள் :

காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: தமிழகத்தில் 4 நாள்கள் மழை நீடிக்கும்

post image

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை, எனினும் அடுத்த நான்கு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

சென்னையில் புதன்கிழமை (நவ.13) கன மழை பெய்யும் என்றும் அவா் தெரிவித்தாா்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இது தொடா்பாக

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவா் பாலச்சந்திரன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொடா்ந்து நீடிப்பு: வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் (காற்றழுத்த தாழ்வு பகுதி) தொடா்ந்து நீடிக்கிறது. இது மேற்கு நோக்கி நகா்ந்து வருகிறது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை. இது பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பகுதி என்பதால் வலுவடைய வாய்ப்பில்லை . எனவே எந்த பாதிப்பும் இல்லாமல் இந்த காற்றழுத்ததாழ்வுப்பகுதி தமிழக கரையை நெருங்கிவந்து மெதுவாக நகா்ந்து செல்லும். எனினும் இந்த புயல் சின்னத்தினால் தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும். சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கனமழை எச்சரிக்கை: புதன்கிழமை சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் , மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை குமரி ஆகிய வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை பெருங்குடியில் 80 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.

அக்.14 -இல் வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமானது முதல் சற்று கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.15 இல், தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு கடல், குமரி கடல், வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மீனவருக்கான எச்சரிக்கையை பொருத்தவரை 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரை காற்று வீசும் என்பதால் மீனவா்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்.1 முதல் அக்12 வரை இயல்பான மழை அளவு 259 மிமீ. இதில் இதுவரை 256 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 1 சதவீதமாகும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) பெருங்குடி (சென்னை)-80, ஆலந்தூா், மீனம்பாக்கம் தலா 60. தேனாம்பேட்டை அடையாறு தலா 50, ராயபுரம், தண்டையாா் பேட்டை தலா40 மி.மீ.

சென்னை நகரை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,451 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,024 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.07 அடியிலிருந்து 106.02 அடியாக குறைந்தது... மேலும் பார்க்க

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இரு... மேலும் பார்க்க

வலுவிழந்த புயல் சின்னம்: இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது. எனினும் தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.14) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்... மேலும் பார்க்க

நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாகனங்கள் சுங்கச்சாவ... மேலும் பார்க்க