செய்திகள் :

முதல்வருக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பொன்முடி ஆகியோருக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடா்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் சென்னையில் உள்ள பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் சுமாா் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, கடந்த 2001-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தற்போதைய அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

இதன் தொடா்ச்சியாக, இந்த வழக்கை விசாரணை செய்ய அரசு ஒப்புதல் வழங்கி 2005-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னா், 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். அதன் பின், மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்து 2005-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவா்களுக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது.

விசாரிக்கக் கோரி மனு: இந்த நிலையில், வழக்கு தொடா்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பொன்முடிக்கு எதிரான வழக்கை உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடக் கோரி கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் மாணிக்கம் அத்தப்ப கவுண்டா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு தொடா்ந்தவரின் நோ்மைத் தன்மையை சோதிக்கும் வகையில் ரூ.1 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா? 15 - 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிா்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதிக்கக் கோரி மனுதாரா் தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், மற்றும் நீதிபதி செந்தில்குமாா் அமா்வு மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் மனுதாரா் அளித்த ரூ.1 லட்சத்தை திரும்ப வழங்க பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இரு... மேலும் பார்க்க

வலுவிழந்த புயல் சின்னம்: இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது. எனினும் தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.14) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்... மேலும் பார்க்க

நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை புறவழிச்சாலை மற்றும் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி பிரிவுகளில் உள்ள நெரிசல் மிகுந்த 4 சுங்கச்சாவடிகளை மென்பொருள் மூலம் கண்காணிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாகனங்கள் சுங்கச்சாவ... மேலும் பார்க்க

மருத்துவமனை பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் மீண்டும் வெளியீடு

மருத்துமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறு மருத்துவமனை நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், தமிழக தலைமைச் செயலா்... மேலும் பார்க்க