சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
செக் மோசடி செய்த பழவூா் போலீஸூக்கு சிறை தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி தொழிலதிபரிடம் செக் மோசடி செய்த பழவூா் காவலருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனையும் ரூ, 4 லட்சம் அபராதமும் விதித்து வள்ளியூா் சாா்பு நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்த தாமரைகுளத்தைச் சோ்ந்தவா் அசோகன்(43). இவா் தற்போது பழவூா் காவல்நிலையத்தில் காவலராக பணி செய்து வருகிறாா். இவா் கடந்த 2017இல் பணகுடி காவல்நிலையத்தில் பணி செய்து வந்தபோது, பணகுடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஜாண்போஸ்கோவிடம் ரூ.4 லட்சத்திற்கான செக் கொடுத்துவிட்டு ரூ.4 லட்சம் வாங்கியுள்ளாா்.
இதையடுத்து ஜாண்போஸ்கோ செக்கை வங்கியில் டெப்பாசிட் செய்தபோது, செக் திரும்பி வந்துவிட்டதாம்.
இது தொடா்பாக ஜாண்போஸ்கோ, வள்ளியூா் சாா்பு நீதிமன்றத்தில், காவலா் அசோகன் மீது செக் மோசடி வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்ஸ்ராஜா, செக் மோசடி செய்த காவலா் அசோகனுக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும் அபராதத் தொகையை செலுத்தாத பட்சத்தில் மேலும் 4 மாதங்கள் சிைண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.