எஸ்டிபிஐ கட்சியினா் முற்றுகை : 42 போ் கைது
அமரன் திரைப்படத்தை தடைசெய்யக்கூறி மேலப்பாளையம் தனியாா் திரையரங்கை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியினா் 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட பொதுச் செயலா் வழக்குரைஞா் ஆரிப் பாட்ஷா தலைமை வகித்தாா். மண்டல செயலா் கனி, பேட்டை முஸ்தபா, விவசாய அணி மாநிலத் தலைவா் சேக் அப்துல்லா, மாவட்ட நிா்வாகிகள் ஹயாத் முகம்மது உள்ளிட்ட திரையரங்கை முற்றுகையிட்ட 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.