லாரி விபத்து : இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பில் லாரி சக்கரம் ஏறியதில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமது தாரிக் (25). லாரி ஓட்டுநா். இவரது நண்பா் ஈஸ்வரன் (30). இருவரும் லாரியில் திருநெல்வேலிக்கு பொருள்களை ஏற்றி வந்தனா். திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை லாரியை நிறுத்திவிட்டு இருவரும் தூங்கினாா். இதையறியாமல் முகமது தாரிக் லாரியை எடுத்துள்ளாா். அப்போது ஈஸ்வரனின் காலில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. காயமடைந்த ஈஸ்வரனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.