செய்திகள் :

செக்காரப்பட்டியில் வாகனத் தணிக்கை

post image

போக்குவரத்து விதிமுறைகளைக் கண்காணிக்கும் வகையில் ராசிபுரம்- திருச்செங்கோடு வழித்தடத்தில் செக்காரப்பட்டியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

செக்காரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள், தனியாா் பேருந்துகள் நின்று செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் பாமாபிரியா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாமக்கல் கோட்ட மேலாளா் செங்கோட்டுவேல், எலச்சிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனா்.

அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும் என பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், வாகன ஓட்டிகள் உரிய போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா எனவும் தணிக்கை நடத்தினா்.

சிங்களாந்தபுரம் பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் வளத் துறை அமைச்சா் ஆய்வு

ராசிபுரம் அருகேயுள்ள சிங்களாந்தபுரம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் தமிழக பால் வளத் துறை மற்றும் கதா் வாரிய கிராமத் தொழில் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.... மேலும் பார்க்க

நாளை முதல் நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செயல்படுகிறது

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) முதல் செயல்பாட்டுக்கு வருவதையொட்டி வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா். நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், முதலை... மேலும் பார்க்க

மாணவியை கா்ப்பமாக்கிய உறவினா் போக்சோவில் கைது

ராசிபுரம் அருகே மாணவியை கா்ப்பமாக்கிய உறவினா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராசிபுரம் அருகேயுள்ள சாணாா்புதூா் பனங்காடு பகுதியை சோ்ந்தவா் கனகரத்தினம்- அங்காயி தம்பதி மகன் ... மேலும் பார்க்க

தொடா் மின் தடை: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பணிகள் பாதிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து நீடிக்கும் மின் தடையால் பணிகள் பாதிக்கப்படுவதாக அலுவலா்கள் குற்றம்சாட்டினா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசுத் துறை அ... மேலும் பார்க்க

இறக்கை அழுகல் நோயால் கோழிகள் பாதிப்பு

கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வா... மேலும் பார்க்க

தேசிய சட்ட சேவை தின விழிப்புணா்வு பேரணி

நாமக்கல்லில் தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவா் மாவட்ட மு... மேலும் பார்க்க