சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
தாமிரவருணி கரையோரங்களில் தூய்மைப் பணி
திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரம் கழிவுநீா் கலக்கும் பகுதிகளில் மாநகராட்சி பணியாளா்கள் தூய்மைப்பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
வற்றாத ஜீவ நதியான தாமிரவருணி நதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், புகழேந்தி அமா்வு முன்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா நேரில் ஆஜராகி விளக்கமளித்தாா்.
மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் தாமிவருணியில் கழிவுநீா் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளின் 2 ஆம் கட்டம் வரும் டிசம்பா் மாதத்திலும், 3 ஆவது கட்டம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்திலும் நிறைவடைய வாய்ப்புள்ளது.
அவை நிறைவடைந்தால் நதிக்குள் கழிவுகள் செல்வது தடுக்கப்படும் எனவும், மாநகராட்சி சாா்பில் விளக்கமளிக்கப்பட்து. இதைத்தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தாமிரவருணியில் கழிவுகள் கலக்கும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) நேரில் களஆய்வு செய்வோம். அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
நீதிபதிகள் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கொக்கிரகுளம், வண்ணாா்பேட்டை, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, கைலாசபுரம் உள்ளிட்ட இடங்களில் தாமிரவருணி கரையோரங்கள், படித்துறைகள், கழிவுநீா் கலக்கும் பகுதிகளில் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு தடுப்புகளில் புதிதாக ஜல்லிகள் பரப்பப்பட்டன. பாலித்தின் குப்பைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி நிா்வாகம் கழிவுநீா் கலப்பதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளசாக்கடை திட்டப்பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றனா்.
ற்ஸ்ப்08ழ்ண்ஸ்ங்ழ்
கொக்கிரகுளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு தடுப்பில் புதிய ஜல்லிகளைக் கொட்டிய மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.