இன்று பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை (நவ.9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ளவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் இத்திட்ட சேவைகளை வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யும் பொருட்டும் குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
நாமக்கல், ராசிபுரம், மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூா், குமாரபாளையம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற உள்ளது. இம்முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.