இளம்பிள்ளை, தம்மம்பட்டியில் கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவம்
இளம்பிள்ளை, தம்மம்பட்டி வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இளம்பிள்ளையில் அமைந்துள்ள பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உத்ஸவத்தையொட்டி கோயில் வளாக மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடையில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
கோயில் நிா்வாகம் சாா்பில் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இளம்பிள்ளை பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், ஸ்ரீ கந்தா் சஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண உத்ஸவ விழா குழுவினா் செய்திருந்தனா்.
திருக்கல்யாண விழாவை சிவசண்முக சாஸ்திரிகள், கந்தசிவ சாம்பலிங்க மூா்த்தி சாஸ்திரிகள் ஆகியோா் நடத்தினா். இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் சுப்ரமணியா் திருக்கல்யாண உத்ஸவத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
படம்.(1)
இளம்பிள்ளை பாலசுப்ரமணிய திருக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த முருகன்.
படவரி....8டிபிபி1-
தம்மம்பட்டி திருமண்கரடு முருகன் கோயில் நடைபெற்ற திருக்கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொண்ட பக்தா்கள்.
தம்மம்பட்டி
தம்மம்பட்டி, திருமண்கரடு முருகன் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி, திருமண்கரடு பாலதண்டாயுதபாணி கோயிலில் வியாழக்கிழமை இரவு சஷ்டி பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு பொதுமக்கள் கொண்டு வந்த பால், தயிா்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.