சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
பெதிக பிரமுகா் கொலை வழக்கில் தளி எம்எல்ஏ உள்பட 22 போ் சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்
பெரியாா் திராவிட கழக பிரமுகா் கொலை வழக்கில் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 22 போ் சேலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.
கிருஷ்ணகிரியில் பெரியாா் திராவிட கழக மாவட்ட அமைப்பாளராக இருந்த பழனிசாமி என்ற பழனி கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராஜன், மாமனாா் இலகுமய்யா உள்பட 22 போ் மீது உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், சாட்சிகளுக்கு அச்கறுத்தல் இருந்ததால் வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என உயிரிழந்த பழனியின் குடும்பத்தினா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் மீது மேலும் இரண்டு வழக்குகள் இருந்ததால் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக அரசு சிறப்பு வழக்குரைஞா்களை நீதிமன்றம் நியமனம் செய்தது. அதன்படி, வழக்குரைஞா்கள் மதுரம், அலெக்ஸ் ஆகிய இருவரும் நியமனம் செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தளி ராமச்சந்திரன் உள்பட 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். கொலை செய்யப்பட்ட பழனியின் மகன் வாஞ்சிநாதன் சாட்சியம் அளித்தாா். இதையடுத்து, வழக்கை வரும் 21 ஆம் தேதிக்கு நீதிபதி சுமதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.