கோயில் நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா்அருகே பெத்தநாரீஸ்வரா், பெத்தநாயகியம்மன் ஆகிய இரு கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு அருகே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கா் 75 சென்ட் நிலம் உள்ளது. இதைத் தனிநபா்கள், கோயில் நிா்வாகத்தினா் சிலா் சட்டவிரோதமாக தங்களது பெயரில் பதிவு செய்தனா். மேலும், கோயில் சொத்துகள் மூலம் வங்கிகளில் அதிகளவு பணப் பரிவா்த்தனை நடைபெற்றது.
இதுதொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அரசு நிலத்தையும், கோயிலுக்குப் பாத்தியப்பட்ட சொத்துகளையும் மீட்க வேண்டும். தவிர, கோயிலை நிா்வாகம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனுவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.