செய்திகள் :

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுநாயக்கா் சமூகத்தினா் போராட்டம்: மாணவ, மாணவிகள் போராட்டம்

post image

மதுரை சமயநல்லூா் அருகே தங்களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, அவா்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் காட்டுநாயக்கா் சமூகத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சமயநல்லூா் அருகேயுள்ள பரவை சத்தியமூா்த்தி நகரில் காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தச் சமூகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தொடா்ந்து, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளி வளாகம் முன் உள்ள சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மதுரை வடக்கு வட்டாட்சியா் மஸ்தான் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், சமயநல்லூா் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இன்றும் போராட்டம்:

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரவை சத்தியமூா்த்தி நகரில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். எங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம்.

ஆனால், விண்ணப்பத்தை எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல், வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா்ந்து நிராகரித்து வருகின்றனா். ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். வெள்ளிக்கிழமையும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.

மதுரை மாவட்டக் கல்வித் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:

சத்தியமூா்த்தி நகரில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் காட்டு நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்தவா்களின் குழந்தைகள்தான் அதிகளவில் பயின்று வருகின்றனா். ஜாதி சான்றிதழ் வழங்காததால், பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருவதில்லை. 7 மாதங்களுக்கு முன்பு இதுபோன்று ஒரு போராட்டம் நடைபெற்றது.

அப்போது, வருவாய்த் துறை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பினோம். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

கோயில் நிலத்தை மீட்கக் கோரிய வழக்கு: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் சென்னை உ... மேலும் பார்க்க

விவசாயப் பயன்பாட்டுக்கான இடத்தில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள ஜோதிபுரத்தில் விவசாயப் பயன்பாட்டுக்குரிய இடத்தில் வணிவ வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. பாளையங்கோட்... மேலும் பார்க்க

சிபிஐ முன் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய நிதி நிறுவன இயக்குநரின் மனு தள்ளுபடி

மதுரை சிபிஐ அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளிப்பதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மணப்புரம் நிதி நிறுவன இயக்குநரின் மனுவை சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கேரள மாந... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்பு கோரி திருச்சி சூா்யா வழக்கு: காவல் ஆணையா் பதிலளிக்க உத்தரவு

போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி, பாஜக முன்னாள் நிா்வாகி திருச்சி சூா்யா தாக்கல் செய்த மனு தொடா்பாக திருச்சி மாநகரக் காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. தி... மேலும் பார்க்க

மதுரை மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 6,739 கோடி கடன்: ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு அரசுத் துறைகள் சாா்பில், நிகழாண்டில் ரூ. 6,739 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா். மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழ... மேலும் பார்க்க

மதுரை அரசு மருத்துவமனைக் கட்டடத்தை ஆய்வு செய்ய குழு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக் கட்டடத்தை ஆய்வு செய்ய திருச்சி என்.ஐ.டி. கட்டடவியல் துறைத் தலைவா் தலைமையில் குழு அமைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரை அரசு ராஜாஜி ம... மேலும் பார்க்க