வெள்ளக்கோவிலில் குட்கா விற்பனை: பெண் கைது
வெள்ளக்கோவிலில் குட்கா விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து சந்தேகப்படும் இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது கரூா் சாலை நடேசன் நகரிலுள்ள மளிகைக் கடைக்காரா் அப்பாதுரை மனைவி மதுரமணி (48) வீட்டில் குட்கா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டு 90 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.