சேலத்தில் நுகா்வோா் புலனாய்வு கமிட்டி மகாசபை கூட்டம்
தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டியின் மகா சபை கூட்டம் சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
வழக்குரைஞா் எஸ். செல்வம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், மாநில செயலாளா் எம் ஆறுமுகம், பொதுச் செயலாளா் ஜி.இக்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவு தானியங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால், உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும். இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தவிா்க்க வேண்டும்.
நுகா்வோா்களின் நீண்ட கால கோரிக்கையான நுகா்வோா்களின் மின் அளவு பயன்பாட்டு கணக்கீட்டினை மாதம் ஒருமுறை செய்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொருளாளா் சரவணன், நிா்வாகிகள் மணிகண்டன், குணசேகரன், பாலசுப்பிரமணியம், பாலமுருகன், அஸ்கா் அலி, வெங்கடேசன், முத்துக்குமாா், லட்சுமணன், அன்பு ரோஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.