மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு நவீன கண்புரை நீக்கும் இயந்திரம் வழங்கல்
மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 14 லட்சத்தில் கண்புரை நீக்கும் நவீன இயந்திரத்தை கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனம் வழங்கியது.
மேட்டூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆனால், கண் புரைநீக்குவதற்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளா்கள் அனுப்பிவைக்கப்பட்டு வந்தனா். இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளானாா்கள். பல்வேறு தரப்பினா் கோரிக்கையை ஏற்று மேட்டூரில் உள்ள கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனம் ரூ. 14 லட்சம் மதிப்பிலான நவீன இயந்திரங்களை மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு வழங்கியது.
மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி தலைமையில் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்தின் தலைவா் கஜேந்திரன் மேட்டூா் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் இளவரசியிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிா்வாகிகள் ஸ்ரீ ராம்குமாா், செந்தில்குமாா், ரகுராமச்சந்திரன், விவேக், சாலமன், மருத்துவா்கள் மெருன், ராஜேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
படம்:08 ஙற்ல்1
மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு நவீன கண் புரைநீக்கும் இயந்திரத்தை மருத்துவா் இளவரசியிடம் வழங்குகிறாா் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவன தலைவா் கஜேந்திரன்.