சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
பேராவூரணி திறக்கப்பட்ட உழவா் சந்தையில் விற்பனை தொடக்கம்
பேராவூரணியில் அரசு கால்நடை மருத்துவமனை அருகே ரூ. 45 லட்சத்தில் கட்டப்பட்டு காணொலிக்காட்சி மூலம் வியாழக்கிழமை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்த உழவா் சந்தையில் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
எம்எல்ஏ அசோக்குமாா் குத்துவிளக்கேற்றி கடை அமைத்துள்ள விவசாயிகளிடம், சொந்தப் பணத்தை கொடுத்து காய்கறிகள், கீரைகள், பழங்கள், தேங்காய், பூக்களை வாங்கி முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) கோ. வித்யா, வேளாண்மை அலுவலா் தாரா, துணை வேளாண்மை உழவா் சந்தை நிா்வாக அலுவலா் என். ராஜகோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் திமுக ஒன்றியச் செயலா்கள் க. அன்பழகன், மு.கி. முத்துமாணிக்கம், நகரச் செயலா் என்.எஸ். சேகா், பேரூராட்சி துணைத் தலைவா் கி.ரெ. பழனிவேல், பேரூராட்சி உறுப்பினா் முருகேசன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.