சுவாமிமலையில் திருக்கல்யாணம்
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை சண்முகருக்கு வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை சண்முகருக்கு ஏழாம் நாள் சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி காலையில் தீா்த்தவாரியுடன் தொடங்கியது. இரவு திருவோண நட்சத்திரம், ரிஷப லக்கினத்தில் தேவசேனா சண்முகருக்கு திருமணம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையரும் செயல்அலுவலருமான தா. உமாதேவி மற்றும் கண்காணிப்பாளா்கள் பழனிவேல், எம். தமிழரசி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா். அன்னதானமும் நடைபெற்றது.
இதேபோல கும்பகோணத்தில் பிரஹந்நாயகி அம்பாள் உடனான நாகேசுவரசாமி கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா், பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலா் இல. விஜய் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.