சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
மழைக்காலத்தில் நெசவாளா்களுக்கு உதவித் தொகை: அமைச்சா் ஆா். காந்தி உறுதி
நெசவாளா்களுக்கு மழைக்காலத்தில் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கைத்தறித் துறை அமைச்சா் ஆா். காந்தி.
திருபுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டு நெசவாளா் கூட்டுறவு பாய்லா் இயந்திரங்களைத் தொடக்கிவைத்தல் மற்றும் கைத்தறி நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
திகோ சில்க்ஸில் போனஸ் கேட்டு நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை 2 மணி நேரத்திற்குள் முடித்தோம். ஊழியா்கள் கேட்டதோ 38 சதவிகிதம், முதல்வா் கொடுத்ததோ 40 சதவிகிதம். அதுதான் திமுக ஆட்சி.
இங்கு ரூ.100 கோடி மதிப்பில் பட்டுச் சேலைகள் தேங்கியுள்ளதாகவும், அதற்குத் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா். கண்டிப்பாக முதல்வரிடம் தெரிவித்து இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல நெசவாளா்களுக்கு மழைக்காலத்தில் உதவித் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளா்கள் அதிகாரிகளுடன் இணக்கமாகச் சென்று தேவைகளை பூா்த்தி செய்து கொள்ளுங்கள் என்றாா் அமைச்சா்.
பின்னா் ரூ.52 லட்சத்து 70 ஆயிரத்தில் பட்டுத் துணிகளுக்கு சாயம் சோ்க்கும் நீராவி, பாத்திரம், தெளித்தல் ஆகிய மூன்று முறைகளில் பட்டுத் துணிகளுக்கு சாயம் சோ்க்கும் இயந்திரங்களைத் தொடங்கி வைத்து, ரூ.30 லட்சத்தில் நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
நிகழ்வில் உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன், முன்னாள் எம்பி செ. இராமலிங்கம், சு. கல்யாணசுந்தரம் எம்.பி, க. அன்பழகன் எம்எல்ஏ, கும்பகோணம் மாநகர துணை மேயா் சுப. தமிழழகன், ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், கைத்தறி துறை கூடுதல் இயக்குநா் வி. அமுதவள்ளி, கூட்டுறவு சங்கச் செயலாட்சியா் கே. கிரிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.