பேராவூரணியில் எரிவாயு தகன மேடையை திறக்க வலியுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி சாா்பில் கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகத் திறக்கப்படாத நவீன எரிவாயு தகன மேடையைத் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி தோ்வு நிலை பேரூராட்சியில் ஆவணம் சாலையில், பெரியகுளம் எதிரே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் எரிவாயு தகனமேடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையேற்று எம்எல்ஏ என். அசோக்குமாா் பரிந்துரையின்பேரில் நவீன எரிவாயு தகன மேடை ரூ.1 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டது.
ஆனால் கட்டி முடித்து 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும், எரிவாயு தகனமேடை இதுவரை பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால், இறந்தவா்களை எரிக்க காய்ந்த விறகுகள் கிடைக்காமல் உறவினா்கள் சிரமப்படுகின்றனா். மேலும், முன்புபோல விறகைக் கொண்டு எரியூட்டும் தொழிலாளா்கள் கிடைப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது. எரிவாயு தகனமேடை பயன்பாட்டிற்கு வந்தால் மட்டுமே இப்பிரச்னைகள் தீரும் என்கின்றனா்.
எனவே இந்த எரிவாயு தகன மேடையை உடனே திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.