சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
136 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
தஞ்சாவூரில் காரில் பதுக்கப்பட்டிருந்த 136 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் கூடலூா் சாலை வெண்ணாறு வடகரை சாலையில் கஞ்சா விற்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா தலைமையில் காவலா்கள் நிகழ்விடத்தில் நடத்திய ஆய்வில் ஒரே பதிவெண் கொண்ட இரு காா்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த காா்களில் காவல் துறையினா் நடத்திய சோதனையில் பின் இருக்கையின் அடியில் 65 பொட்டலங்களில் 136.600 கிலோ கஞ்சா பதுக்கப்பட்டிருந்ததும், அதன் மதிப்பு ஏறத்தாழ ரூ. 25 லட்சம் என்பதும் தெரிய வந்தது.
அவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, இரு காா்களில் இருந்த மதுரை ஆரப்பாளையம் ஏ. ரவிச்சந்திரன் (44), மதுரை கூடல் நகா் பகுதி தமிழ் நகா் ஏ. சுப்பிரமணி (46), புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கீழ ஏம்பல் பி. டேவிட் பொ்ணாண்டோ (30), ஆவுடையாா்கோவில் சேமங்கோட்டை கே. அய்யப்பன் (29) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், 5 பேரும் ஆந்திரத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து 4 பேரையும் காவல் துறையினா் கைது செய்து, இரு காா்களையும், 5 கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா்.