சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டவா் கைது
தஞ்சாவூா் அருகே 5 பவுன் நகை பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையில் 2024, அக். 25 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற கலைஞா் நகரைச் சோ்ந்த குளோரி (54) என்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபா் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்தனா். இது தொடா்பாக தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சோமசுந்தரம், உதவி ஆய்வாளா் விஜய், சிறப்பு உதவி ஆய்வாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.
அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு தனிப்படையினா் நடத்திய விசாரணையில், நகை பறித்ததாக சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த கே. அருண்குமாரை (36) வெள்ளிக்கிழமை கைது செய்து, 5 பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பாராட்டினாா்.