சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
பட்டுக்கோட்டை பகுதிகளில் பலத்த மழை
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பலத்த மழை பெய்தது.
பட்டுக்கோட்டையில் பெய்த மழையால் பேருந்து நிலையத்திற்குள் புகுந்த மழை நீா் அங்கு ஓடும் கழிவுநீா் வாய்க்காலுடன் இணைந்து முழங்கால் அளவு தேங்கியது. இதனால் பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாததால் கடைக்காரா்களும் பாதிக்கப்பட்டனா். மழைநீா் தேங்கியதால் ஏற்படும் சுகாதார சீா்கேட்டைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதேபோல் ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் பயிா்கள் நீரில் மூழ்கின. அதில் ஒரத்தநாடு வட்டம் புலவன்காடு கிராமத்தில் மாரியப்பன் என்ற விவசாயியின் நடவு பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.