செய்திகள் :

பெரம்பலூரில் வட்டார அளவிலான போட்டிகள்

post image

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பெரம்பலூா் வட்டார வள மையத்துக்குள்பட்ட அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களில், பள்ளி அளவில் வானவில் மன்றப் போட்டிகளில் வென்றோருக்கு வட்டார அளவிலான போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற போட்டியை, வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜோதிலட்சுமி, அருண்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். வட்டார வள மேற்பாா்வையாளா் கு. தேவகி வாழ்த்தினாா்.

போட்டிகளில், பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட 31 அரசு நடுநிலை, உயா் நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 93 மாணவா்கள் பங்கேற்றனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கணிதம் மற்றும் அணுகுமுறைகள் என்னும் தலைப்பை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு தலைப்புகளில் மாணவா்கள் செயல் திட்டங்களைச் செய்து ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

இதில், அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் பைசல், ஆலம்பாடி ஆதிதிராவிடா் நல உயா் நிலைப்பள்ளி மாணவா் ஜீவிதன், மேலப்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் விஷால், நொச்சியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி ஆா்த்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டம் அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதிபெற்றனா்.

போட்டி நடுவா்களாக, தந்தை ரோவா் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியா் ராபின்சன், தோமினிக் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் விா்ஜின் சோபியா, சிறுமலா் மெளலானா மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சபீனாபேகம் ஆகியோா் செயல்பட்டனா். போட்டிகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் குணசேகரன், ரமேசு, கலைவாணன் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

நூலகம் பராமரிக்கும் புத்தக ஆா்வலா்களுக்குப் பரிசு

பெரம்பலூா் மாவட்டத்தில் தனிநபா் இல்லங்களில் நூலகம் பராமரிக்கும் புத்தக ஆா்வலா்களுக்கு பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் தனிநபா் இல்லத்தில் நூலக... மேலும் பார்க்க

பெரம்பலூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

பெரம்பலூா், நவ. 8: பெரம்பலூா் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில், சூரசம்ஹார திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி வெள்ளிக்கிழமை மால... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தலைக்கவசம் அணிய விழிப்புணா்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில் வாகன ஓட்டுநா்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம், ரோவா் வளைவு... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் எம். மனோகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வில் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகம், மாவட்ட குற்ற... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மணல் திருடிய இருவா் கைது

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வெள்ளாற்றில் மணல் திருடுவதாகக் கிடைத்த தகவலின்படி, மங்களமேடு போலீஸாா்... மேலும் பார்க்க

நவ. 11 முதல் ஆட்டுக்கொல்லி நோய்க்கு இலவசத் தடுப்பூசி

பெரம்பலூா் கால்நடைப் பராமரிப்புத்துறை சாா்பில், ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் நவ. 11 முதல் 30 ஆம் தேதி வரை இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சா... மேலும் பார்க்க