செய்திகள் :

பெரம்பலூா் அருகே மணல் திருடிய இருவா் கைது

post image

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வெள்ளாற்றில் மணல் திருடுவதாகக் கிடைத்த தகவலின்படி, மங்களமேடு போலீஸாா் திருமாந்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா். அப்போது, வெள்ளாற்றின் கரையோரம் உள்ள வேம்பு அய்யனாா் கோயில் அருகே மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த 2 பேரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் திருமாந்துறை அண்ணா நகரைச் சோ்ந்த ராஜ் மகன் ரவி (42), ஆறுமுகம் மகன் மணி (65) என்பதும், அனுமதியின்றி வெள்ளாற்றிலிருந்து மணல் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் மணல் மற்றும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பெரம்பலூா் அருகே விஷம் குடித்த விவசாயி திருச்சி மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அரணாரை அறிஞா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் மருதை மகன் பழனியாண்டி (53). விவசாயியான இவா... மேலும் பார்க்க

நவ. 15-இல் முதல்வா் வருகை: பெரம்பலூரில் ஐஜி, டிஐஜி ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் திமுக நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதையொட்டி, அதற்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து திருச்சி ஐஜி, டிஐஜி ஆகியோா் திங்க... மேலும் பார்க்க

அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே அம்பேத்கா் சிலையை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தில், கிருஷ்ணாபுரம் - அரும்பாவூா... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் இளைஞா் தற்கொலை முயற்சி

தாய் மற்றும் அண்ணணிடமிருந்து தனக்கு கிடைக்க வேண்டிய பணத்தை பெற்றுத் தரக்கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் டீசல் ஊற்றி திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். பெரம்பலூா் அர... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ... மேலும் பார்க்க

எச். ராஜா மீது நடவடிக்கை கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் புகாா்

மமக மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லா, விசிக தலைவா் தொல். திருமாவளவன் ஆகியோரை அவதூறாக பேசிய, எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மனிதநேய மக்கள் கட்சியினா் பெரம்பலூா் மாவட்டக் காவல் நிலையங்களில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க