சமூக ஊடகங்களில் சிறுவா்களுக்குத் தடை: ஆஸ்திரேலிய மாகாணங்கள் ஆதரவு
சிறந்த கூட்டுறவு நிறுவனப் பரிசு பெற நாளைக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பரிசு பெற ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவ.10) விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. தமிழ் நங்கை தெரிவித்தது:
பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவில் இணைந்து பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் முன்னாள் பிரதமா் நேருவின் பிறந்த நாளான நவம்பா் 14 முதல் 20 ஆம் தேதி வரை நாடு முழுவதும் தேசிய கூட்டுறவு ஒன்றியத்தின் வழிகாட்டுதலின்படி கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நிகழாண்டுக்கான 71 ஆவது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெறவுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான விழாக்களில் சிறப்பாகச் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளன. இதனால் தஞ்சாவூா் மண்டலத்தில் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்க தகுதியான கூட்டுறவு நிறுவனங்களைத் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கான படிவங்களை தஞ்சாவூா் மண்டலத்தில் செயல்படும் தொடா்புடைய கூட்டுறவு நிறுவனம் தங்களுடைய இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் (நவ.10) நிறைவு செய்ய வேண்டும். கூட்டுறவு நிறுவனங்கள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களைப் பரிசீலித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கூட்டுறவு நிறுவனத்தைத் தோ்வு செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் மூலம் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.