பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத ச...
Surya: தமிழில் சொதப்பிய அஞ்சான் இந்தி வெர்ஷனில் ஹிட் ஆனது எப்படி? - சீக்ரட் சொன்ன யூடியூப் சேனல்!
கோல்ட் மின்ஸ் தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் யூடியூப் சேனலாகும். நார்த் இந்தியன் நண்பர்களுக்கு விஜய், அஜித், சூர்யா என நம் ஸ்டார்கள் அறிமுகமாவது இந்த யூடியூப் சேனல் மூலமாகத்தான்.
ஜீவாவின் கீ, விஜய்யின் பைரவா, தனுஷின் மாரி எல்லாம் இந்த யூடியூப் சேனலில் பல மில்லியன் வியூஸ்களை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள்.
இந்த சேனலின் உரிமையாளர் மனிஷ் ஷா திரையரங்குகளில் சொதப்பிய படங்கள் கூட யூடியூபில் ப்ளாக் பஸ்டராகும் சீக்ரெட்டை தி ஹாலிவுட் ரிப்போர்டர் தளத்துக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்திருந்தார். அதில் சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் பற்றியும் பேசினார்.
கோல்ட்மைன்ஸ் சேனலில் பல ஆக்ஷன் திரைப்படங்கள் ஹிட் அடிப்பது வழக்கம்தான். ஆனால் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் சரியாக ஓடாத ஜோதிகாவின் ராட்சசி திடைப்படம் இந்தியில் 380 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
அவரிடம் உங்களை மிகவும் சர்பிரைஸ் செய்த படங்கள் என்ன என்று கேட்கப்பட்ட போது, சூர்யாவின் அஞ்சான் (2014) நயன்தாராவின் டோரா, தெலுங்கு படமான என்.டி.ஆர் நடித்த சக்தி ஆகியவை திரையரங்கில் வசூல் பெறவில்லை என்றாலும் எங்களுக்கு ஹிட் எனக் குறிப்பிட்டார்.
தென்னிந்திய ரசிகர்களை விட இந்தி ரசிகர்களின் ரசனை முற்றிலும் மாறுபட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவர் வாங்கும் திரைப்படங்களை அப்படியே டப் செய்வதில்லை சில படங்கள் ரீ-எடிட் செய்யப்படுமாம். அப்படி செய்யப்பட்ட படங்களில் அஞ்சான் சிறந்த ப்ளாக் பஸ்டராக அமைந்ததாம்.
"அஞ்சான் படத்தின் தமிழ் வெர்ஷன் நான்-லீனியராக இருக்கும். நான் இந்தியில் அதனை லீனியராக மாற்றினேன். இதனால் படம் ஹிட் ஆனது. இயக்குநர் லிங்குசாமி ஒரு நேர்காணலில் கோல்ட் மைன்ஸ் செய்ததை தான் செய்திருந்தால் படம் ஹிட் ஆகியிருக்கும் என்றுக் குறிப்பிட்டார்." என்றார் மனிஷ் ஷா!