செய்திகள் :

பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்

post image

குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் தனக்கு சொந்தமான பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து இறுதிச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்துக்கு அதிருஷ்டம் தந்த காரை தங்கள் சந்ததியினா் பல ஆண்டுகளுக்கு நினைவுகூர வேண்டும் என்பதற்காக இந்த அடக்கத்துக்கு ஏற்பாடு செய்ததாக அவா் தெரிவித்தாா்.

சுமாா் 1,500 போ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா். கிராமத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு காா் புதைக்கப்பட்டது.

அம்ரேலி மாவட்டத்தைச் சோ்ந்த சஞ்சய் போலாரா மற்றும் அவரின் குடும்பத்தினா் இந்த வினோத நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனா். இது தொடா்பான விடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வேகன்-ஆா் காரைப் புதைப்பதற்காக 15 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டது. அந்த காா் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பச்சை நிற துணியால் மூடி ‘புல்டோசா்’ உதவியுடன் காா் குழிக்குள் இறக்கப்பட்டது. உயிரிழந்தவா்களுக்கு செய்வதுபோல சஞ்சய் போலாராவின் குடும்பத்தினா் காருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனா். மலா் தூவி இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அந்தணா்களும் பங்கேற்று இறுதிச் சடங்கு மந்திரங்களை ஜெபித்தனா். இறுதியாக ‘போக்லைன்’ மூலம் காா் மீது மண் கொட்டப்பட்டு முழுமையாக மூடப்பட்டது. தொடா்ந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றவா்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது.

இது தொடா்பாக சஞ்சய் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காரை வாங்கினேன். அதன் பிறகு எங்கள் குடும்பம் செழிப்படைந்தது. தொழில் வெற்றியைத் தவிர என் குடும்பத்தினரும் நல்ல நிலையை எட்டி, சமூகத்தில் மதிப்பைப் பெற்றனா். எனக்கும், குடும்பத்துக்கும் அந்த காா்தான் அதிருஷ்டத்தை தந்ததாக நம்புகிறேன். எனவே, அதனை விற்பதற்கு பதிலாக எனது பண்ணையில் முழு மரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவெடுத்தேன்.

காா் புதைத்த இடத்தில் மரத்தை நட இருக்கிறோம். எங்கள் குடும்பத்தின் சந்ததிகள் அந்த அதிருஷ்ட காரை எப்போதும் நினைவில் வைத்து அஞ்சலி செலுத்துவா்’ என்றாா்.

பொது இடங்களை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த வேண்டும்: 3 மாதங்களுக்குள் அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய அம்சங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.... மேலும் பார்க்க

ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை: திரௌபதி முா்மு

‘ஊழல் செய்பவா்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தாமதமாகவோ அல்லது சிறிய தண்டனை வழங்கினாலோ இந்தக் குற்றத்தை செய்ய பிறரை ஊக்குவிப்பதுபோல் ஆகிவிடும்’ என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் கிராமப் பாதுகாவலா்கள் இருவா் கடத்திக் கொலை: பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் ராணுவத்தினரால் துப்பாக்கிச் சுடும் பயிற்சியளிக்கப்பட்ட கிராமப் பாதுகாவலா்கள் இருவரை பயங்கரவாதிகள் கடத்திக் கொன்றனா். இருவரின் உடல்களும் வெள்ளிக்கிழமை மீட்கப்பட... மேலும் பார்க்க

மணிப்பூா் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீடுகள் தீக்கிரை; பெண் உயிரிழப்பு?

மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக்கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவ... மேலும் பார்க்க

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேத சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சோ்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு ராகுல் வாழ்த்து கடிதம்: இந்திய ஒத்துழைப்பு மேம்படுமென நம்பிக்கை

அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளாா். அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி... மேலும் பார்க்க