செய்திகள் :

Amaran : `காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு...' - அமரன் குறித்து கோபி நயினார் விமர்சனம்!

post image

அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவானது அமரன் திரைப்படம்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது அமரன்.

முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றனர்.

அமரன்

காஷ்மீரை கதைக்களமாக கொண்டிருந்த அமரன் திரைப்படம் அரசியல் ரீதியாக விமர்சனங்களைச் சந்தித்தது.

அமரன் படம் குறித்து 'அறம்' திரைப்பட இயக்குநர் கோபி நயினார், "சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது. இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.

நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு." என்று பதிவு செய்துள்ளார்.

Surya: தமிழில் சொதப்பிய அஞ்சான் இந்தி வெர்ஷனில் ஹிட் ஆனது எப்படி? - சீக்ரட் சொன்ன யூடியூப் சேனல்!

கோல்ட் மின்ஸ் தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் யூடியூப் சேனலாகும். நார்த் இந்தியன் நண்பர்களுக்கு விஜய், அஜித், சூர்யா என நம் ஸ்டார்கள் அறிமுகமாவது இந்த யூடியூ... மேலும் பார்க்க

Inbox 2.0 EP 5: "2X ல வச்சு இந்த வீடியோவை பாருங்க மக்களே..!" | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 5 இப்போது வெளிவந்துள்ளது.முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

Aurora: தமிழர்கள் மத்தியில் பிரபலமான அரோரா தியேட்டருக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்; பின்னணி என்ன?

மும்பை தமிழர்கள் மத்தியில் அரோரா தியேட்டர் என்றால் மிகவும் பிரபலம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரோரா தியேட்டரில் தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். தமிழகத்தில் எந்த படம் வெளியானாலும் அப்படம் அர... மேலும் பார்க்க

Ramya Pandiyan: கங்கைக் கரையில் காதலனைக் கரம் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்... குவியும் வாழ்த்துகள்!

இயக்குநர் ராஜுமுருகனின் ஜோக்கர், மலையாள நடிகர் மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திரைப்படங்கள் மட்டுமல... மேலும் பார்க்க

Dhanush 55 : அமரன் இயக்குநர் இயக்கத்தில் தனுஷின் 55-வது திரைப்படம்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு `அமரன்' திரைப்படம் வெளியாகியிருந்தது.சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக களமிறங்கி அசத்தியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல்... மேலும் பார்க்க

Amaran: அமரன் திரைப்படம் காஷ்மீர் மக்களின் நிதர்சனத்தை பேசவில்லையா? - காஷ்மீர் நடிகர் உமைர் பேட்டி!

`அமரன்' திரைப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.`44RR' குழுவில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். `அமரன்' படத்தில் காட்சிப்படுத்திய இந்த ... மேலும் பார்க்க